பெண் தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே குட்டை நீரில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி மனைவி சொர்ணம் (வயது 60). இவர் வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன்பிறகும் தொடர்ந்து வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஊருக்கு அருகே உள்ள குட்டை நீரில் குதித்து தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.