கச்சிராயப்பாளையம்,
கல்வராயன் மலையில் சேராப்பட்டு அருகே உள்ள வாழக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சித்ரா (வயது 34). 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சித்ராவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு, சித்ரா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று காலை சிகிச்சைபலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.