கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஆர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி இலக்கியா (வயது 22). இவர் தனது குழந்தையுடன் தனது தாய் வீடான நந்தன்கோட்டைக்கு வந்து கடந்த சில நாட்களாக தங்கிருந்தார். இந்தநிலையில் நேற்று இலக்கியாவும், அவரது தாய் மேகலாவும் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளனர். பின்னர் மேகலா வீட்டிற்கு வந்து விட்டார். இலக்கியா வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் இலக்கியாவை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேகலா கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.