கடத்தூர்
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 57). சம்பவத்தன்று சண்முகம் தன்னுடைய மனைவியை மொபட்டில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு- சத்தி ரோட்டில் உள்ள சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது சண்முகத்தின் மொபட்டின் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஸ்வரி இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.