தூக்கில் பெண் பிணம்

நெல்லையில் தூக்கில் பெண் பிணம் தொங்கியது;

Update:2022-05-20 02:20 IST

நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் பலாப்பழ ஓடை பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது.. உடனே போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்