கடலூரில் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூரில் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூரின் நீர் ஆதாரமாய் விளங்கும் கொண்டங்கி ஏரியை பாதுகாக்க, கடலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தை எம்.புதூரில் அமைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர்-புதுச்சேரி- சென்னை ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் நேற்று அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் நடராஜன், புருஷோத்தமன், மாயவேல், ராஜேந்திரன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.