மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை நிகழ்ச்சி

மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-06-09 23:41 IST

ஜெயங்கொண்டம் 

அரியலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பா.ஜ.க. மருத்துவப்பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜீ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர், அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமாரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன் களப்பணியாளர்களை வாழ்த்திப்பேசினர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பற்றியும், பாரத பிரதமர் செயல்பாடு குறித்தும் விரிவாக பேசப்பட்டது. முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்களாக சிறப்பாக சேவை புரிந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி நினைவு பரிசாக தட்டு வழங்கப்பட்டது. கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் நகர தலைவர் ராமர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்