மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தந்தை, மகன் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி தந்தை, மகன் படுகாயம்
வால்பாறை
வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 42). மெக்கானிக். இவரது மகன் சூரியா(12). அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் பாலமுருகன் தனது மகன் சூரியாவுடன் மோட்டார் சைக்கிளில் முருகாளி எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
சோலையாறு அணை சாலையில் உருளிக்கல் எஸ்டேட் அருகே வந்தபோது, எதிரே சக்தி(38) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது.
இந்த விபத்தில் பாலமுருகன், சூரியா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.