2 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகன் கைது

பாளையங்கோட்டையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-27 19:13 GMT

நெல்லை:

பாளையங்கோட்டையை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் (வயது 51), கணேசன் (54). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான கங்கை முருகன் (55), அவரது மகன் மணிகண்டன் (19) ஆகியோர் பாலசுப்பிரமணியன் மற்றும் கணேசன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கங்கை முருகன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்