அரிசி ஆலை காவலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது
அரிசி ஆலை காவலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.;
ஆரணி
அரிசி ஆலை காவலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி அருகே உள்ள புனலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள அரிசி ஆலையில் காவலாளியாக வேலை உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (48) மற்றும் அவரது மகன் விநாயகம் (25) ஆகிேயார் குமார் வேலை செய்யும் அரிசி அலையில் ஆடுகளை மேய்த்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த குமார் அவர்களை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் குமார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை தனுஷ்கோட்டியும் அவரது மகன் விநாயகமும் சரமாரியாக தாக்கி ஆபாசமாக பேசி உள்ளனர்.
படுகாயம் அடைந்த குமார் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் குமார் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து தனுஷ்கோட்டி அவரது மகன் விநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.