மது அருந்த பணம் தராத தந்தை மீது தாக்குதல்
மணல்மேடு அருகே மது அருந்த பணம் தராத தந்தை மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மணல்மேடு;
மணல்மேடு அருகே உள்ள வக்காரமாரி அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது57). விவசாயி. இவருடைய மகன் சிலம்பரசன்(30). சம்பவத்தன்று இவர் மது அருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமமூர்த்தி மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.