மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம்: சிகிச்சை பெற்ற தி.மு.க. பிரமுகர் சாவு

மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற தி.மு.க. பிரமுகர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-07-22 16:27 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 62). இவர் தி.மு.க. நகர துணை செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு சீனிவாசபுரம் ரெயில்வே சுரங்க பாதை வழியாக மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த குழியில் மொபட் ஏறி, இறங்கிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நகர மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்