அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள்

அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-26 18:11 GMT

பெரம்பலூர் அருகே பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து செல்லும் ஆட்டோக்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதினால் பொதுமக்களும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்