கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் மனு அளித்த விவசாயிகள்

பயிர்காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் மனு அளித்தனர்

Update: 2023-10-09 18:45 GMT

இளையான்குடி ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகளில் சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், இளையான்குடி, அ.திருவுடையார்புரம் ஆகிய பிர்காகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இளையான்குடி வட்டாரத்தில் 43 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளனர். போதிய மழை இல்லாததால் அனைத்து கிராமங்களிலும் நெல் பயிர்கள் 33 சதவீதம் பாதிப்பு அடைந்ததாக தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே போர்கால அடிப்படையில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமேன அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்