விவசாயிகள் நல உரிமைச்சங்க கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் நல உரிமைச்சங்க கூட்டம் நடந்தது;

Update: 2023-04-10 19:15 GMT

திருவாரூர்;

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செய்திபிரிவு தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார். எஸ்.பி. பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முறையாக செயல்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கி வரைவு திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். மத்திய அரசு, நிலக்கரி டெண்டரை ரத்து செய்ததை அரசிதழில் வெளியிட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் தலைமையில் நடத்தவேண்டும். வேளாண் சாராத எந்த தொழில் கூடத்தையும் இந்த பகுதியில் கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மகளிர் அணி நிர்வாகி ராஜேஸ்வரி விஜயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்