காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்தில் வேளாண் கருவிகள்

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்தில் வேளாண் கருவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா வழங்கினார்.

Update: 2023-03-25 09:42 GMT

காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தின் கீழ் 4 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் 2 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 6 லட்சத்திற்கான காசோலையும், 3 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் ரூ.3,795 மதிப்பில் வழங்கப்பட்டது.


வேளான்மை பொறியியல் துறை சார்பாக, வேளாண் எந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு பவர் டில்லரும், ஒரு நபருக்கு டிராக்டரும் வழங்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.12½ லட்சம் ஆகும். தோட்டக்கலை சார்பாக 2 விவசாயிகளுக்கு கலைஞர் திட்டத்தின் சார்பில் தலா 7,500 வீதம் மானியமும் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவ ருத்ரய்யா வழங்கினார்.


இந்த நிகழ்வில் காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, நேர்முக உதவியாளர் க.கணேசன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், தோட்டக்கலை துணை இயக்குநர் கௌதமன் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்