ஏரியின் உபரிநீரை மங்கள வாத்தியம் முழங்க வரவேற்ற விவசாயிகள்...!
திருவண்ணாமலையில் ஏரியின் உபரிநீரை மங்கள வாத்தியம் முழங்க விவசாயிகள் வரவேற்றனர்.;
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளூர் கிராமத்தில் ஏரி கலங்கள் நீரை மங்கள வாத்தியம் முழங்க பூஜை செய்து பூ போட்டு வரவேற்றனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஏரிகளின் நீர் நிரம்பி வந்து நிலையில், தெள்ளூர் கிராமத்தில் உள்ள ஏரி நீர் நிரம்பியது.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கோபு தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக வந்து ஏரி நீர் நிரம்பி வழியும் கலங்கள் பகுதியில் பூஜை செய்து பூ போட்டு ஏரி நீரை வரவேற்று மகிழ்ந்தனர். பின்னர் இனிப்புகள் வழங்கினர்.