காவிரி தண்ணீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
நாகுடிக்கு வந்த காவிரி தண்ணீரை மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
அறந்தாங்கி:
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் ஆண்டு தோறும் தண்ணீர் திறக்கப்படும் தேதியை விட முன்கூட்டியே தமிழக அரசு தண்ணீரை திறந்து விட்டது. இந்நிலையில் அறந்தாங்கி கடைமடை பகுதியின் தொடக்க பகுதியான நாகுடிக்கு காவிரி தண்ணீர் வந்தது. இதையடுத்து காவிரி தண்ணீரை வரவேற்கும் விதமாக கல்லணை கால்வாய் பாசனத்தார் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.