குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
செங்கத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகளை, கோட்டாட்சியர் ஒருமையில் பேசியதாக கூறி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.