கரும்புக்கு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்புக்கு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-12-01 20:01 GMT

பெரம்பலூர் சர்க்கரை ஆலை அலுவலர்கள், கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம், சர்க்கரை ஆலை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- 2022-2022-ம் ஆண்டுக்கான அரவை பணி வருகிற 5-ந் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் ஆலையில் டர்பன் எந்திரம் பழுது நீக்கும் பணி நடைபெறுவதால், வருகிற 17-ந் தேதி அரவை தொடங்கப்படும். இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி 7-ந் தேதி நடைபெறும். அரவைக்காலதாமதமாவதால் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு இதுவரை 1,400 டன் கரும்பு அனுப்பப்பட்டுள்ளது. 3.60 லட்சம் டன் கரும்பு அரைக்க திட்டமிட்டு, அதில் 10 ஆயிரம் டன் அறிஞர் அண்ணா ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது, 400 வண்டிகள் பதிவு செய்ய திட்டமிட்டு, 360 வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் கொடுக்க ஆவண செய்யப்படும். சர்க்கரை இருப்பு 1 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரம் குவிண்டாலும், மொலாசஸ் 1,753 டன்னும் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சீனிவாசன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசியதாவது:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்க தொகையும் வழங்க வேண்டும். பார்க்கவா பரிந்துரைப்படி சர்க்கரை உற்பத்தியில் உபபொருளுக்கு கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டும். ராஜீவ் ரஞ்சன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இணை மின் திட்டத்துக்கு பிடித்தம் செய்த பங்குத்தொகைக்கு சான்றிதழ் தரும் சூழ்நிலை இல்லாததால், பிடித்தம் செய்த தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும். அமராவதி ஆலைக்கு அனுப்பிய மொலாசசுக்கான தொகை ரூ.11 கோடியை உடனே வாங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்