யூரியா தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் வலியுறுத்தல்
யூரியா தட்டுப்பாட்டை போக்க குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.;
போளூர்
யூரியா தட்டுப்பாட்டை போக்க குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
போளூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வசூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. மாவட்ட வினியோக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சபீதா, தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அதிகாரி ராமு வரவேற்றார்.
இதில் விவசாயிகள் பார்த்திபன், பழனி, மூர்த்தி உள்ளிட்ட பலர் பேசுகையில், ''யூரியா தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், குறைதீர்வு கூட்டம் போளூரில் தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட வேண்டும்.
போளூரில் உள்ள மஞ்சள் ஆற்று கால்வாய் மற்றும் களம்பூர் அலியாபாத் தடுப்பணை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும், செண்பகத் தோப்பு அணை கால்வாயில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்க மனுக்கள் பெறப்பட்டன.