கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசம்: மீண்டும் புதிதாக சாகுபடி செய்ய வேண்டி இருப்பதாக விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்தன. அவற்றை மீண்டும் புதிதாக சாகுபடி செய்ய வேண்டி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Update: 2022-08-09 16:58 GMT

கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம், கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை உள்ளிட்ட காய்கறி வகை பயிர்களும், மல்லிகை, முல்லை, செவ்வந்தி உள்ளிட்ட மலர் செடிகளும் கடந்த 4 நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியிருந்தன. இதனால் அவை முற்றிலும் அழுகிவிட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இப்பகுதி மக்கள் காய்கறி மற்றும் மலர் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானத்தையே பெருமளவு நம்பி உள்ளனர். தற்போது காய்கறியும், மலர்களும் நல்ல மகசூல் கொடுக்கும் நேரத்தில் வெள்ளநீரால் அனைத்து செடிகளும் அழுகியதால் இனி மீண்டும் புதிதாக சாகுபடி பணியை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்