விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்குநேரி தாலுகா பருத்திப்பாடு அருகே உள்ள சேர்ந்தான்குளம் கிராமத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்கள், பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டு உள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநில குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், பெருமாள், பீர்முகமது ஷா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை, செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன், ஒன்றிய தலைவர் கணேசன், செயலாளர் எஸ்.ரஜினி, துணை தலைவர் சி.ரஜினி, மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.