பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்

நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Update: 2023-10-24 19:15 GMT

நன்னிலம்;

நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.

கருகும் பயிர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் இன்றி வெடித்து கிடக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர். டெல்டா பகுதிகளில் மேட்டூர் அணை தண்ணீரையும் மற்றும் பருவமழையையுமே நம்பி சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது மேட்டூர் அணையில் நீரின் அளவு குறைந்து விட்டதால் மேட்டூர் அணை மூடப்பட்ட நிலையில் பருவமழை பெய்யாததாலும் சம்பா நெற்பயிர்கள் வளர்ச்சியின்றி இருக்கிறது. தண்ணீர் இன்றி வெடித்து கருகும் நிலையில் வயல்கள் உள்ளது. இதனால் வாய்க்கால்களில் தேங்கி கிடக்கும் நீரை விவசாயிகள் பாத்திரங்கள் மூலம் எடுத்து பயிர்களில் ஊற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.

இழப்பீடு

பருவமழை பெய்யும் என்று விவசாயிகள் காத்திருந்த போதும் மழை நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் போதுமான அளவுக்கு பெய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மேலும் கருகும் நிலையில் பயிர்கள் உள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்