விவசாயிகள் போராட்டம்
செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மனு கொடுக்கும் இயக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பலராமன், பொருளாளர் உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, வட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
போராட்டத்தில் திண்டிவனம்-நகரி ெரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். வழிகாட்டுதல் மதிப்பை பரிசீலனை செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உதவி கலெக்டர் அனாமிகாவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.