துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை அருகே துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-07-06 16:12 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 20 கிலோ எடையுள்ள மணிலா விதை மூட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருகே உள்ள பெரியகுளம் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக 20 கிலோ எடையுள்ள 300 மணிலா விதை மூட்டைகள் வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிலா விதை மூட்டை வாங்க விவசாயிகள் இன்று காலை அங்கு வந்தனர்.

அவர்களை அங்குள்ள அலுவலர்கள் காலையில் இருந்த மதியம் வரை காத்திருக்க வைத்துள்ளனர்.

பின்னர் பகல் 3 மணியளவில் அதிகாரிகள் வந்தால் தான் மணிலா விதை கொடுக்க முடியும் என்ற அலைகழித்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் துணை வேளாண்மை விரிவாக மைய அலுவலகத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்