கொள்ளிடம் அருகே மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் அருகே மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-08-25 18:06 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கிராமத்துக்கு மின் வினிேயாகம் இல்லாததால் கிராமமே இருளில் மூழ்கி கிடந்தது .எனவே உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர். கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வரத்து வந்தபோது ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை திட்டு கிராமத்தில் 10 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்து இருந்து தண்ணீர் வடிந்த பிறகு பின்னர் மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர். தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பத்து நாட்களாக கிராமத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் கிராமத்தை சூழ்ந்து இருந்ததால் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை ஆய்வு செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்