விவசாய நிலத்தின் அருகில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரிக்காக விவசாய நிலத்தின் அருகில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

Update: 2022-11-10 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏனாதிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்ததோடு, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்காக அங்குள்ள வயல்வெளி சாலை அருகே சாலை அமைக்கும்பணி நடைபெற்றது. இதை அறிந்து அங்கு வந்த விவசாயிகள் மணல் குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்த சாலை அமைக்கும் பணி வேறு இடத்தில் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்