விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:30 GMT

கரூரில் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினர். இதில், விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைத்து, பயிர் காப்பீட்டு துறையில் இருந்து தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்