விவசாயிகள் சாலை மறியலில்

திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-04-10 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று விளைபொருட்களை கொண்டு வந்த விவசாயிகள் திடீரென செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், விளை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, பெரிய வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், காலையில் கொண்டு வரப்பட்ட விளை பொருட்களுக்கு மாலை 6 மணிக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்வதாகவும், மாற்ற சாக்கு இல்லை எனவும், விளைபொருட்களுக்கு வியாபாரிகள் உடனுக்குடன் பணம்பட்டுவாடா செய்யவில்லை என வியாபாரிகள் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினர். அதற்கு போலீசார், உங்களது விளைபொருட்களுக்கு மீண்டும் நாளை காலை விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்