விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்21-ந் தேதி நடக்கிறது;
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.