கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள வைகை, திம்மம்பட்டி, வடக்கனேந்தல் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழை நன்றாக பெய்யும் நம்பி விவசாய பணிகளை தொடங்கினோம். ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் எங்கள் வயல்வெளிகளில் பயிர்கள் வளரமுடியாமல் கருகி வருகின்றன. அதனை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சுமார் 600 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் கருகிவிட்டது. எனவே விவசாயிகள் அனைவருக்கும் அரசிடம் வலியுறுத்தி முழு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். மேலும், பயிர் காப்பீடு செய்துள்ளதால் அதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.