கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.;
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நவம்பர் 2022-ம் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை, உழவர் நலத்துறை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.