விதைகள்-இடுபொருட்களை ஆன்லைன் முறையில் விவசாயிகள் பெறலாம்

விதைகள்-இடுபொருட்களை ஆன்லைன் முறையில் விவசாயிகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-05-02 18:49 GMT

விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் டி.என்.ஏ.யு. அக்ரிகார்ட் இணையதளம் மூலம் பெறுவதற்கு றுறுறு.வயெரயபசiஉயசவ.உழஅ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 15 வகையான இடுபொருட்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு இடுபொருட்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த இணையதளம் மூலம் நெல், மக்காசோளம், பயறு வகைகள், காய்கறி விதைகள், பயிர் பூஸ்டர்கள், உயிரியல் இடுபொருட்கள், எண்ணெய் வித்து பயிர் விதைகள் ஆகியவற்றை இணையதளம் மூலம் ஆர்டர் செய்து உரிய கட்டணம் செலுத்தி, தங்கள் வீட்டு முகவரியிலேயே பெற்றுக்கொள்ளலாம். இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் குறைவதுடன், செலவும், நேரமும் மிச்சமாகும். தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும். மகசூல் கூடும். வருமானம் அதிகரிக்கும். ஆகவே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த இணையதள சேவையை பயன்படுத்திக்கொண்டு பலன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்