விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம்
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம்/;
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 972 விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று உள்ளனர். 6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர்கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் வட்டியில்லா பயிர் கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் நெல்லுக்கு(பாசனம்/மானாவரி) ரூ.26100, மக்காச்சோளம்(பாசனம்) ரூ.28750,(மானாவாரி)ரூ.19,200, பருத்தி(பாசனம்) ரூ.26,350,(மானாவாரி) ரூ.17,550, மிளகாய்(பாசனம்) ரூ.26,950, (மானாவாரி) ரூ.20250, தென்னை(பராமரிப்பு)-ரூ.25,450, நிலக்கடலை(பாசனம்)ரூ.24,900, (மானாவாரி)ரூ.20,200 ஆகும். விவசாயிகள் தங்கள் பகுதி கூட்டுறவு கடன் சங்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படத்துடன் விண்ணப்பித்து கடன் பெறலாம்.
மாவட்டத்தின் அனைத்து கூட்டுறவு கடன் சங்கத்திலும் உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது என மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.