தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் மின்வாரிய அதிகாரி தகவல் தெரிவித்தனர்;

Update: 2022-06-12 17:45 GMT

வெளிப்பாளையம்:

நாகை மின் பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் இயக்குதலும், பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விருப்ப மனு அளிப்பதற்கு முன்பே பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தடையில்லா சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் மின் பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை. இத்திட்டத்தில் 15 எச்.பி. வரை மின் பளு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். விருப்பமுள்ள விவசாயிகள் 5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2½ லட்சமும், 5-7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சமும், 7.5-10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சமும், 10-15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சமும் என உரிய தொகையை செலுத்தி விரைந்து மின் இணைப்பு பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்