முதுகுளத்தூர் அருகே கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

முதுகுளத்தூர் அருகே கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-17 18:55 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே கால்வாய்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல், மேலத்தூவல், கிருஷ்ணாபுரம், கே.ஆர்.பட்டணம் உள்ளிட்ட 4 கிராம பகுதியில் இருந்து 1000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு கண்மாய் நீர் பாசனம் மூலமாகவும், கிணற்று பாசம் மூலமாகவும் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக 4 கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து வரக்கூடிய ஆற்று தண்ணீர் வராததால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து 4 கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து ஆற்று தண்ணீரை கொண்டு வரும், வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பரபரப்பு

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த 4 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கீழத்தூவல் அருகே பரமக்குடி மைக்கல்பட்டினம் சந்திக்கும் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

இந்த தகவல் அறிந்த வருவாய் துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்