விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பட்டா வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விளைநிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும், மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவர்சோலையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ரமேஷ் வரவேற்றார். போராட்டத்துக்கு ஜோஸ் தலைமை தாங்கினார். தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாளாக உயர்த்த வேண்டும். தினசரி சம்பளம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் கோபிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூடலூர் பகுதி செயலாளர் சி.கே.மணி, நாசர், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.