முல்லை, செண்டி பூக்களுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் பகுதியில் முல்லை, செண்டி பூக்களுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-03 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகாவில் ஆயக்காரன்புலம், மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார்,வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ ,செண்டி பூ சாகுபடி நடைபெறுகிறது. இத்தொழிலில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் காலை 4 மணி முதல் 10 மணி வரை முல்லைபூக்களை பறித்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கபடுகிறது . ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முல்லைப்பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், செண்டு பூ கிலோ ரூ.120 -க்கும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். பூக்களுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விழா நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. மற்ற நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் 250 வரை விற்பனையாகிறது. மற்ற நாட்களில் நல்ல விலை கிடைக்காததாலும், ஒரு கிலோ முல்லைப்பூ எடுக்க கூலி ரூ. 50 கொடுக்க வேண்டி உள்ளதாலும் இந்த முல்லைப்பூ சாகுபடியில் பெரிய லாபம் கிடைப்பதில்லை என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்