விவசாயி மர்மசாவு

மேல்மலையனூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-08-03 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் சுரேஷ் (வயது 35) விவசாயி. இவருடைய மனைவி சவுந்தரி (34). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. சரஸ்வதி (13) என்ற மகளும், மணிகண்டன் (12), பத்திரி (10) ஆகிய 2மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சவுந்தரி தனது கணவரை பிரிந்து கொடுக்கன்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் தேப்பிரம்பட்டு கிராமத்தில் கீழே தவறி விழுந்ததில் அடிப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சவுந்தரி அவலூர்பேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது கணவர் சுரேசை அவரது உறவினர் ஒருவர் தள்ளிவிட்டதால் தான் அவர் காயமடைந்தார். இந்த நிலையில் எனது கணவர் இறந்துள்ளார். எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதன் காரணமாக இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்கிற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்