பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 45), விவசாயி. இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த பாலுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.