ரெயில் மோதி விவசாயி பலி

நெல்லிக்குப்பத்தில் ரெயில் மோதி விவசாயி பலியானார்.;

Update: 2023-07-03 19:05 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள எய்தனூரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). விவசாயி. இவர் நேற்று தனது சைக்கிளில் நெல்லிக்குப்பத்தில் இருந்து எய்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இருப்பினும் அதை சிங்காரம் கடக்க முயன்றார். அப்போது மன்னார்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்காரம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்தி்லேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிங்காரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்