மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). விவசாயியான இவர் நேற்று மதியம் அதே ஊரில் உள்ள வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். மாடாம்பூண்டி கிராமம் அருகே சாலை ஓர மண் பாதையில் நடந்து வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மரூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பாஸ்கரன்(49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.