பஸ் மோதி விவசாயி பலி

பஸ் மோதி விவசாயி பலியானார்.;

Update:2023-10-19 00:15 IST

கமுதி, 

கமுதி அருகே உள்ள வழிமறிச்சான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன்(வயது 56). இவர் நேற்று செய்யாமங்கலம் விலக்கு சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கமுதி நோக்கி வந்த தனியார் டிராவல்ஸ் பஸ் எதிர்பாராதவிதமாக முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்