மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்;

Update: 2023-10-20 19:15 GMT

இளையான்குடி அருகே உள்ள கல்லடிதிடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் மகன் பழனிச்செல்வம்(வயது 34). விவசாயி. சம்பவத்தன்று பழனிச்செல்வம் செல்போன் பேசிக்கொண்டே தனது வீட்டின் எதிரே உள்ள மின்சார வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது சாய்ந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

தூக்கிவீசப்பட்ட பழனிச்செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பழனிச்செல்வம் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்