மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

மொபட் மீது கார் மோதி விவசாயி பலியானார்.;

Update: 2023-09-02 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 74), விவசாயி. இவர் நேற்று காலை தனது மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு சாலை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்