உடலில் காயங்களுடன் விவசாயி பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

தண்டராம்பட்டு அருகே உடலில் காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார்.

Update: 2023-04-28 17:17 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே உடலில் காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார்.

தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70), விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு நிலத்துக்கு செல்வதாக மனைவி மனோன்மணியிடம் கூறி விட்டு சென்றார். அவர் நேற்று காலை வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவி, மகன், உறவினர்கள் சுற்று வட்டார பகுதியில் தேடினர்.இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக தண்டராம்பட்டு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர் கீழ்சிறுப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் என தெரியவந்தது.

உடலை மீட்டு பார்த்தபோது வலது கால் தொடை பகுதியிலும், வாய் பகுதியிலும் ரத்த காயம் இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது தெரியவில்லை. அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நடராஜனுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்