மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;
கடையம்:
கடையம் அருகே உள்ள பிள்ளைகுளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் தினமும் மதுகுடித்து வந்தார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.