தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-13 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள தம்மாபுரத்தை சேர்ந்தவர் முனி வீரப்பா. இவருடைய மகன் சுனில் (வயது 23), விவசாயி. இவர் கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சாவு

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த விதமான மன அழுத்தம் காரணமாக சுனில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்