விஷம் குடித்து விவசாயி தற்கொலை

நெய்வேலி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.;

Update: 2023-09-04 20:10 GMT

நெய்வேலி,

குடும்ப பிரச்சினை

நெய்வேலி அருகே ஆயிப்பேட்டை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் செந்தில்முருகன் (வயது 45). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வரும் போது, குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அதேபோல் குடித்து விட்டு வந்ததை, அவரது மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகள் வித்யா லட்சுமி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்